/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிக்கல் பெற்றோர் அலைக்கழிப்பு
/
குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிக்கல் பெற்றோர் அலைக்கழிப்பு
குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிக்கல் பெற்றோர் அலைக்கழிப்பு
குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிக்கல் பெற்றோர் அலைக்கழிப்பு
ADDED : டிச 12, 2024 01:31 AM
ராசிபுரம், டிச. 12-
குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க செல்லும்போது, ஆவணங்களில் உள்ள குளறுபடிகளால் பெற்றோர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழை ஆதாரமாக வைத்து குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொண்டாலும், உடனடியாக ஆதார் எடுத்து வர அறிவுறுத்துகின்றனர்.
இதற்காக, குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க சென்றால், பிறப்பு சான்றிதழ் மற்றும் உடன் செல்லும் பெற்றோரின் ஆதாரை ஆவணமாக கேட்கின்றனர். தற்போது, ஆதார் எடுப்பதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், தாய், தந்தையின் பெயர் பெரும்பாலும் இனிசியல் இல்லாமல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே தாய், தந்தையரின் ஆதாரில் இனிசியலுடனும் அல்லது அவர்களுடைய தந்தையின் பெயர் முழுமையாக உள்ளது.
இதனால், 'பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயர் அவருடைய ஆதாரில் இருப்பது போல் இல்லை' எனக்கூறி திருப்பி அனுப்புகின்றனர். பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயரில் மாற்றம் செய்வது எளிதான காரியம் இல்லை.
அதேசமயம், பான் கார்டு, வங்கி என பல்வேறு அலுவலகங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரில் வெறும் இனிசியல் இல்லாமல் பெயரை மட்டும் பதிவு செய்து வருவதும் முடியாத காரியம்.
இதன் காரணமாக, குழந்தைகளுக்கு ஆதாரை எடுப்பதற்காக, பிறப்பு சான்றிதழ் பதிவு செய்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், ஆதார் மையங்கள் என, பெற்றோர் அலைந்து வருகின்றனர்.
எனவே, ஆதார் மையங்களின் நோடல் அதிகாரி, இதுகுறித்து விசாரணை செய்து சரியான ஆணையை பிறப்பிக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

