ADDED : செப் 17, 2026 06:14 AM

வெண்ணந்துார்:வெண்ணந்துார்,
அத்தனுார் ஆகிய டவுன் பஞ்., பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரை
சுத்திகரிப்பு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக
கழிவுநீர் குழாய், தாளம்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதன்
ஒரு பகுதியாக, அத்தனுார் பகுதியில் இருந்து தாளம்பள்ளம் செல்லும்
சாலையில், கடந்த சில நாட்களாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து
வருகின்றன. இதற்காக சாலையின் பல்வேறு இடங்களில் குழிகள்
தோண்டப்பட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் மண் சாலையின்
நடுப்பகுதியிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த
வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள்
அதிகளவில் செல்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக
அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கழிவுநீர் குழாய்
பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, தோண்டப்பட்ட பகுதிகளை முறையாக
சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
