/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 7ல் தீமிதி விழா
/
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 7ல் தீமிதி விழா
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 7ல் தீமிதி விழா
மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 7ல் தீமிதி விழா
ADDED : ஏப் 01, 2024 03:56 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரம் தீமிதி விழா நடப்பது வழக்கம். சுற்றுவட்டார பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி விழா இங்கு மட்டுமே நடக்கிறது. இதனால், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்வர்.
இந்தாண்டு விழா வரும் சனிக்கிழமை, 6ல் பந்தல் சேர்வையுடன் தொடங்குகிறது. நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்படும் பந்தலில் அன்றிரவு ஆஞ்சநேயர் உற்சவர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 7ல் காலை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆஞ்சநேயர் நாமகிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக மெட்டாலா கொண்டு செல்லப்படுகிறார்.
ஆத்துார் பிரதான சாலை வழியாக இந்த ஊர்வலம் நடக்கவுள்ளது. மதியம், சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடக்கும். தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்கள் தீமிதி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

