/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்ணிடம் நகை பறிப்பு கும்பலுக்கு போலீஸ் வலை
/
பெண்ணிடம் நகை பறிப்பு கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : செப் 13, 2011 02:01 AM
ப.வேலூர்: கோவில் திருவிழாவில் பெண்ணின் கழுத்தில் இருந்து ஐந்து பவுன்
தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்ம கும்பலை, ப.வேலூர் போலீஸார் தீவிரமாக
தேடி வருகின்றனர்.
ப.வேலூர் அருகே கூடுதுறைச் சேர்ந்தவர் விவசாயி சந்தானம்
(75). அவர், நேற்று முன்தினம் நன்செய் இடையாறு கருப்பண்ண ஸ்வாமி கோவில்
கும்பாபிஷேக விழாவுக்கு மனைவி சடையம்மாளை (68) அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கும்பாபிஷேக பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி சடையம்மாள்
அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து ப.வேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தாலிக்கொடியை
பறித்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.