ராசிபுரம்: சக்தி படைத்த லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
நீதித்துறையில் ஊழலை ஒழிக்க தேசிய நீதித்துறை கமிஷன் அமைக்க வேண்டும். அன்னிய வங்கிகளில் குவிந்துள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. சி.பி.ஐ., நகரச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். சி.பி.ஐ., (எம்) பிரேத குழு செயலாளர் ராஜகோபால், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், சி.பி.ஐ., வெண்ணந்தார் ஒன்றியச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வன், சி.பி.ஐ., (எம்) பிரேத குழு செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் மாதேஸ்வரன், சபாபதி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.