/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேனீக்கள் கொட்டி மாற்றுத்திறனாளி பலி
/
தேனீக்கள் கொட்டி மாற்றுத்திறனாளி பலி
ADDED : நவ 28, 2024 01:20 AM
தேனீக்கள் கொட்டி
மாற்றுத்திறனாளி பலி
ப.வேலுார், நவ. 28--
ப.வேலுார் அருகே, பொன்மலர்
பாளையம் அடுத்த மேல்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் விழுந்து கிடந்த தென்னங்கீற்றுகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு கலைந்து அதில் இருந்து பறந்து வந்த மலை தேனீக்கள், சுப்பிரமணியை நுாற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கடித்தது. இதில் அலறி துடித்த அவர் மயங்கினார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள், சுப்பிரமணி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி, மலை தேனீக்கள் கொட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.