ADDED : ஆக 14, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்-மோகனுார் சாலையில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, டிபாஸிட்கள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், மாவட்டம் முழுவதும், 30 கிளைகள் இயங்கும். இந்த கிளைகள் மூலம், 165 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 26 பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என, மொத்தம், 746 கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த வங்கி கிளைகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்