/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காருக்கு வழி விடுவதில் தகராறு; பா.ம.க., நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு
/
காருக்கு வழி விடுவதில் தகராறு; பா.ம.க., நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு
காருக்கு வழி விடுவதில் தகராறு; பா.ம.க., நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு
காருக்கு வழி விடுவதில் தகராறு; பா.ம.க., நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
நாமக்கல்: காருக்கு வழி விடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தக-ராறில், வாலிபருக்கு வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக, பா.ம.க., நகர செயலாளர் உள்பட, 6 பேர் மீது போலீசார் வழக்-குப்பதிவு செய்தனர்.நாமக்கல் - திருச்சி சாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் சந்-திரன். இவர், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் சூரியா, 30, உதய பிரகாஷ், 25. அதில், சூர்யா, பா.ம.க., நாமக்கல் நகர செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, உதய பிரகாஷ், காரில் ஆண்டவர் நகர் வழியாக பொன்விழா நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, குறுகிய சாலை எதிரே கார் ஒன்று வந்துள்ளது. அதில், காருக்கு வழி விடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, காரில் இருந்த மஜித்தெருவை சேர்ந்த சித்திக், 21, கோகுல், ரமேஷ், சக்க-ரவர்த்தி மற்றும் உதய பிரகாஷ் ஆகியோருக்கிடையே தகராறு ஏற்-பட்டுள்ளது.இதுகுறித்து, உதய பிரகாஷ், தனது அண்ணனும், பா.ம.க., நகர செயலாளருமான சூர்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மற்றொரு காரில் வந்த சூர்யா, வீச்-சரிவாளால், சித்திக்கை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சித்-திக்கை, நண்பர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இரு தரப்பினரும், நாமக்கல் போலீசில் புகாரளித்-தனர். புகார்படி, சூர்யா, உதய பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.அதேபோல், சூர்யா தரப்பில் கொடுத்த புகார்படி, கோகுல், சித்திக், ரமேஷ், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

