தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முரண்பாடுகள் களையப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: கருத்து தெரிவிக்க அழைப்பு

முரண்பாடுகள் களையப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: கருத்து தெரிவிக்க அழைப்பு

முரண்பாடுகள் களையப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: கருத்து தெரிவிக்க அழைப்பு


ADDED : செப் 26, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:'முரண்பாடுகள் களையப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடுகள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம்' என, நாமக்கல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியில், எட்டு வகையான முரண்பாடுகள் வழிகாட்டி உயர்மட்ட குழுவால் கண்டறியப்பட்டன. பதிவுத்துறை தலைவருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக, சந்தை மதிப்பு வழிகாட்டி முரண்பாடுகளை களைந்திட, மாவட்ட துணை மதிப்பீட்டுக்குழு கூட்டம், கடந்த ஜூலை, 15ல், பதிவுத்துறை தலைவர் (மதிப்பீட்டு குழு) தலைமையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து முரண்பாடுகளை களைந்து, சீரமைக்கப்பட்ட வழிகாட்டியை அங்கீகரிக்க, மாவட்ட துணைக்குழு கூட்டம், கடந்த, 22ல், கலெக்டர் மதுபாலன் தலைமையில் கூட்டப்பட்டு, வரைவு வழிகாட்டி ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, முரண்பாடு களையப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் ஏதாவது இருந்தால், அதை வரும், அக்., 9க்குள் கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), வட்டார போக்குவரத்து அலுவலகம் (வடக்கு) பின்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல்-637 003 என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் மூலமோ பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us