/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிரய நிலத்திற்கு பட்டா கேட்டபோது தகராறு: வி.ஏ.ஓ., உதவியாளருக்கு அடி

ADDED : மார் 13, 2024 02:22 AM
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
அருகே, வட்டூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 31; 'மைக்செட்'
தொழிலாளி. இவர் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், 2,500 சதுரடி நிலத்தை
கிரயம் செய்து பத்திரம் பெற்றுள்ளார். ஆனால் அந்த நிலத்திற்கு பட்டா
வாங்கவில்லை. இதனால், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வட்டூர்
வி.ஏ.ஓ., அலுவலகம் வந்த சசிக்குமார், 'பட்டா வழங்காமல் இழுத்தடித்து
வருகின்றனர்' எனக்கூறி சத்தமிட்டுள்ளார்.
அப்போது, வி.ஏ.ஓ., உதவியாளராக பணிபுரிந்து வரும், வட்டூர் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த
சரவணன்,
49, என்பவர், ஏன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என,
கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு,
சரவணனின் கன்னத்தில், சசிக்குமார் ஓங்கி அடித்துள்ளார்.
இதில்,
பாதிக்கப்பட்ட சரவணன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், சசிக்குமாரும், திருச்செங்கோடு
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவர் அளித்த
புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,
விசாரித்து வருகின்றனர்.