/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேம்பாலத்தின் கீழே வாகனங்களால் இடையூறு
/
மேம்பாலத்தின் கீழே வாகனங்களால் இடையூறு
ADDED : ஏப் 07, 2025 01:56 AM
பள்ளிப்பாளையம்: ஜீவாசெட் பகுதியில் மேம்பாலத்தின் கீழே வாகனங்கள் செல்லும் வகையில் விடப்பட்டுள்ள இடைவெளியில், டூவீலர்-களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் அடுத்த ஜீவாசெட் பகுதியில் மேம்பாலத்தின் கீழே, இரண்டு பில்லருக்கு இடையே நேருநகர், குட்டைமுக்கு, காவிரி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வகையில் இடைவெளி விடப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் செல்லும் வாகனங்கள், மேம்பால இடைவெளியில் சென்று வரு-கின்றனர்.
ஆனால், இந்த இடைவெளியை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடி-யாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் டூவீலர்களை நிறுத்துவதை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

