/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை பல ஆண்டாக காத்திருப்பதால் அதிருப்தி
/
புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை பல ஆண்டாக காத்திருப்பதால் அதிருப்தி
புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை பல ஆண்டாக காத்திருப்பதால் அதிருப்தி
புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை பல ஆண்டாக காத்திருப்பதால் அதிருப்தி
ADDED : டிச 18, 2025 05:58 AM
ப.வேலுார்:ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணை தலைவராக ராஜாவும் உள்ளனர். செயல் அலுவலராக சண்முகம் உள்ளார். ப.வேலுார் டவுன் பஞ்.,ல், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது, 3,488 குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிய குடிநீர் இணைப்பு வேண்டி, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்-ளனர். சில ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்ப-டாமல் உள்ளது.கடந்த, இரண்டு ஆண்டுகளாக தலைவர் லட்சுமிக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் உட்கட்சி பூசலால் டவுன் பஞ்., முடங்கியது. தொடர்ந்து மன்ற கூட்டம் நடந்தாலும், எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. மேலும், ப.வேலுார் டவுன் பஞ்., தி.மு.க., உட்கட்சி பூசலால் புதிதாக குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் கிடப் பில் போடப்பட்டது. நடைமுறைப்படுத்த வேண்டிய உள்ளூர் அதிகாரிகள், சிலரின் அலட்சியத்தால் மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதில் சிரமம் தொடர்கிறது.
தற்போது, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்து தலைவர் லட்சுமி நீடிப்பார் என அறிவித்த நிலையில், வரும் வாரத்தில் மீண்டும் மன்ற கூட்டம் நடக்க, டவுன் பஞ்., நிர்-வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையான காவிரி குடிநீர் புதிய இணைப்புகள் தங்களது வீடுகளுக்கு வழங்க வேண்டியும், தெரு விளக்குகள் அமைத்து தர, டவுன் பஞ்., மன்ற கூட்டம் அனுமதி தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

