/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
/
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை தமிழகம் திட்டத்தில் வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
ADDED : ஜூலை 22, 2024 08:11 AM
நாமக்கல் ; 'பசுமை தமிழகம் திட்டத்தில், வனத்துறை சார்பில் மாவட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் முதன்மை திட்டமான, 'பசுமை தமி-ழக இயக்கம்', மாநிலத்தின் பசுமைப்பரப்பை அதி-கரிக்கும் நோக்கத்துடன், 2021ல் தொடங்கப்பட்-டது. நாமக்கல் மாவட்டத்திலும், பசுமை பரப்பை மேம்படுத்த, நாமக்கல் வனக்கோட்டம் சார்பில், 2024-25ல், மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் மேற்-கொண்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்டத்தின் மண் வளத்திற்கு ஏற்ற பூர்வீக மர இனங்கள் மற்றும் பல்வேறு மர வேலைப்பாடுகளுக்கு உகந்த விலை மதிப்பு மிக்க உயர் தர மரக்கன்றுகள், அனைத்து வனத்-துறை நாற்றாங்கால்களிலும் உற்பத்தி செய்யப்-பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.மேலும், தரமான ஆல், அரசு, அத்தி, நீர் மருது, புங்கன், வேம்பு, தேக்கு, மகாகனி, வேங்கை, செம்மரம், நாவல், சவுக்கு மற்றும் பிற மரக்கன்-றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் தாலுகா பகுதியில் உள்ளவர்கள், வனச்சரக அலு-வலர் சந்திரசேகரனை, 9942062486, 04286281369 மூலம் தொடர்புகொண்டு தேவையான மரக்கன்-றுகளை பெறலாம்.ராசிபுரம்- சக்திவேல், 8883985972, அன்பரசு, 93458 68554, சேந்தமங்கலம் நந்தகுமார், 93443 64987, ப.வேலுார் அருள்குமார், 9842702859, திருச்செங்-கோடு முரளி, 9698892071, கொல்லிமலை சுகுமார், 88701 14906, தீபக், 89036 66909, கோபி, 97891 31707, குமாரபாளையம் பிரவீன்குமார், 75501 95814, செல்வம், 97875 45460, மோகனுார் சந்திர-சேகரன், 99420 62486 ஆகியோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம். இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.