/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
ADDED : நவ 28, 2024 01:21 AM
அரசு பள்ளி மாணவர்களுக்கு
நோட்டு, புத்தகம் வழங்கல்
பள்ளிப்பாளையம், நவ. 28-
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா, நேற்று தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டது. பள்ளிப்பாளையத்தில், தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் இளங்கோவன், கொக்கராயன்பேட்டை நான்கு ரோடு பகுதி யில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தொட்டிக்காரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, அம்மாசிபாளையம் ஆரம்ப தொடக்கப்பள்ளிகளில் பயிலும், 138 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு, நோட்டு, புத்தகம், பேனா வழங்கினார். கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், ஜான்சன், சந்திரன், கணேசன், பெரியசாமி, பாண்டியன், செந்தில், தங்கராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.