/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., இளைஞரணி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
/
தி.மு.க., இளைஞரணி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
தி.மு.க., இளைஞரணி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
தி.மு.க., இளைஞரணி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
ADDED : டிச 09, 2024 07:11 AM
நாமகிரிப்பேட்டை: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா, கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும், தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., இளைஞரணி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் அன்பழகன், டவுன் பஞ்., தலைவர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தி.முக., அரசின், 3 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, தண்ணீர்பந்தல்காடு பகுதியில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு கிரிக்கெட், கேரம் போர்டு, செஸ், வாலிபால், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், விளையாட்டு சீருடைகளும் வழங்கப்பட்டன.