/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
/
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 01:25 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (திசா) கூட்டம் நடந்தது. குழு தலைவர் மாதேஸ்வரன் எம்.பி., தலைமை வகித்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், ஈஸ்வரன், மேயர் கலாநிதி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், மத்திய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வேளாண், தோட்டக்கலை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி நீர்பாசன திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்.
நுண்ணீர் பாசனம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் வீடு திட்டம், போஷன் அபியான் திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
துணை மேயர் பூபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அருளரசு உள்பட பலர் பங்கேற்றனர்.