ADDED : பிப் 23, 2026 06:39 AM

நாமக்கல்: தமிழ்நாடு கியோகுஷின் காய்கான் கராத்தே பள்ளி சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே தேர்வு முகாம், நாமக்கல்லில் நடந்தது. தலைமை பயிற்சியாளர் சென்சாய் உதயகுமார் தலைமை வகித்தார்.
முகாமில், மாணவ, மாண-வியருக்கு சுய பாதுகாப்பு, சுயமனித ஒழுக்கம், பெண்களின் தற்காப்பு அவசியம் குறித்து செயல்-விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து, கராத்தே உத்திகள், பயிற்சி முறைகள், யோகா, தியானம் உள்ளிட்ட உடல், மனம் சார்ந்த பயிற்சியளிக்கப்பட்டது. இதைய-டுத்து, ஆரஞ்ச் பெல்ட் முதல், பிரவுன் பெல்ட் வரை பட்டய தேர்வும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பட்டயம், சான்-றிதழ், பெல்ட் வழங்கப்பட்டது. மாவட்டம் முழு-வதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடு-களை, உதயா மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள் செய்திருந்தனர்.
