/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட கொங்கு வரலாறு நுால் வெளியீட்டு விழா
/
மாவட்ட கொங்கு வரலாறு நுால் வெளியீட்டு விழா
ADDED : மார் 24, 2025 06:32 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கொங்கு வரலாறு நுால் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார்.
கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மாவட்ட கொங்கு வரலாறு நுாலை வெளியிட்டார். மோகனுார் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். கொ.ம.தே.க., மாவட்ட இணை தலைவர் காளியப்பன், இரண்டாம் பிரதி பெற்றுக்கொண்டார். கொ.ம.தே.க., மாவட்ட அமைப்பாளர் நவலடி, ஆரியூர் முன்னாள் பஞ்., தலைவர் ராஜாகண்ணன், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். நுாலாசிரியர் கவிஞர் பதுமைச்செல்வன் ஏற்புரையாற்றினார்.