/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்
/
மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்
ADDED : அக் 31, 2024 06:39 AM
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளை-யாட்டு போட்டி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்-பள்ளி, நாமக்கல் செல்வம் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வர-வேற்றார்.
போட்டியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தனர். ஒலிம்பிக் கொடியை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாவட்ட கொடியை நாமக்கல் எம்.எல்.ஏ., ராம-லிங்கம் ஏற்றி வைத்தார். பள்ளிக்கொடியை செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்-வராஜ் ஏற்றி வைத்தார். வெற்றி பெற்ற மாணவி-களுக்கு, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்-வாளர் கோபாலகிருஷ்ணன் பரிசு வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 8 வட்டங்களில் இருந்து, 300 பேர் கலந்து கொண்டனர். இதில், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நி-லைப்பள்ளி மாணவியர், 66 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், எட்டாம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 15 புள்ளிகள் பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.