ADDED : நவ 28, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட அளவில் ஓவிய போட்டி
நாமக்கல், நவ. 28-
இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில், தேசிய அளவிலான ஓவிய போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடந்தது. இப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், 5 முதல், -9 வயது வரையில் பச்சைக்குழு, 10- முதல், 16 வயது வரையில், வெள்ளைக்குழு, 40 சதவீத மாற்றுத்திறனாளிகள் சிறப்புக் குழு என்ற வகையில் மாணவ, மாணவியர் தனித்தனியாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களை, வரும், 30க்குள் இந்திய குழந்தைகள் நலச்சங்க கவுரவ பொருளாளர் முகவரிக்கு அனுப்பி வைக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.