/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
/
குமாரபாளையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
ADDED : நவ 29, 2024 07:38 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகள், நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், மாவட்ட கண்காணிப்பாளர் ஆசியா மரியம் நேரில் வந்து, ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் பதிவேடுகளை பார்வையிட்டார். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், சின்னப்பநாயக்கன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி ஆணையாளர் (பொ) கணேசன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.