/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் மாநகராட்சியில் 79 டன் குப்பை அகற்றம்
/
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் மாநகராட்சியில் 79 டன் குப்பை அகற்றம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் மாநகராட்சியில் 79 டன் குப்பை அகற்றம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் மாநகராட்சியில் 79 டன் குப்பை அகற்றம்
ADDED : அக் 22, 2025 01:38 AM
நாமக்கல், தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, மாநகராட்சியில் கூடுதலாக, 27 டன் குப்பை என, மொத்தம், 79 டன் குப்பை அகற்றப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகளில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும், 52 டன் வீதம் குப்பைகள் அகற்றப்படுகிறது. நேற்று முன்தினம் மாநகரம் முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இதனால், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் பட்டாசு குப்பை அதிகளவில் குவிந்து கிடந்தது. இவற்றை அகற்றும் பணியில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள், மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காக, நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். மக்காத குப்பை தனியாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாநகராட்சியில் வழக்கமாக தினமும், 52 டன் குப்பை அகற்றப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று கூடுதலாக, 27 டன் பட்டாசு குப்பையுடன் சேர்த்து மொத்தம், 79 டன் குப்பை அகற்றப்பட்டது. நேற்று அதிகாலை முதல், இடைவிடாது சாரல் மழை பெய்ததால், பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்றும் குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.