ADDED : நவ 28, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
.
குமாரபாளையம், குமாரபாளையத்தில், டூவீலர் மோதி சுமை துாக்கும் தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம், வெள்ளரிவெளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 75, சுமை துாக்கும் தொழிலாளி. நேற்று காலை 7:15 மணியளவில்,
இவர் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, தனியார் இரும்பு கடை முன் சாலையை கடந்து நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த, ஜூபிடர் ஸ்கூட்டர் டூவீலர் ஓட்டுனர், இவர் மீது மோதினார். இதில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே மாரியப்பன் பலியானார்.
குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், கலியனுாரை சேர்ந்த வெங்கடாசலம், 46, என்ற விவசாயியை கைது செய்தனர்.

