அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பாலு வாக்குறுதி
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் பாலு வாக்குறுதி
ADDED : ஏப் 15, 2026 06:29 AM
பள்ளிப்பாளையம் :''அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றி தரப்படும்,'' என, குமாரபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலு, பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார்.
குமாரபாளையம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பாலு, நேற்று பள்ளிப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல இடங்களுக்கு சென்று, பொதுமக்களை சந்தித்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
குமாரபாளையம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அடிப்படை தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றி தரப்படும். மேலும், திட்டப்பணிகள் உடனுக்குடன் செய்து தரப்படும். கோடையிலும் குடிநீர் பிரச்னை வராமல், குழாய்கள் அமைத்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். சாலை வசதி, தெருவிளக்கு வசதியில் எந்த குறைபாடும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும். அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
மேலும், முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மக்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் மக்களை தேடி மருத்துவம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், தாயுமாணவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், வளர்ச்சி பணிகள், இந்த ஐந்தாண்டுகளில், தி.மு.க., அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீண்டும் நல்லாட்சி தொடர உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். வேட்பாளர் பாலு, வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம், மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும், சால்வை, மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பளித்தனர். வாக்கு சேகரிக்கும் இடத்தில் மக்களின் குறைகளை கேட்றிந்தார். நான் வெற்றி பெற்றால் உங்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
