ராஜாவாய்க்கால் ரீ மாடலிங் செய்யப்படும் தி.மு.க., வேட்பாளர் மூர்த்தி வாக்குறுதி
ராஜாவாய்க்கால் ரீ மாடலிங் செய்யப்படும் தி.மு.க., வேட்பாளர் மூர்த்தி வாக்குறுதி
ADDED : ஏப் 11, 2026 06:04 AM
ப.வேலுார்; ப.வேலுாருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ராஜா வாய்ககால் ரீ மாடலிங் செய்யப்படும், என வாக்குறுதி அளித்தார். அவருக்கு பொதுமக்கள் பூக்களை துாவி உற்சாகமாக வரவேற்பளித்தனர். ப.வேலுார் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்-கொண்டபோது மூர்த்தி பேசியதாவது:
மீண்டும், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ப.வேலுார் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, 'ராஜா வாய்ககால் ரீ மாடலிங்' செய்யப்படும். வெற்றிலை ஆராய்ச்சி மையம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுவப்படும் என தெரிவித்தார். தி.மு.க.,வினர் வாக்கு கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் துாவி வரவேற்று தங்களின் வாக்கு-களை உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்ப-தாக உறுதி அளித்தனர். அப்போது, ப.வேலுார் தி.மு.க., நகர செயலாளர் முருகன், கவுன்சி-லர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.தொடர்ந்து, பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று கடந்த, ஐந்து ஆண்டுகளில் அப்பகுதியில் செய்து முடித்த நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ள நன்மை-களை குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பரமத்தி டவுன் பஞ்.,க்குட்-பட்ட பகுதி
களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் தனராசு, பரமத்தி டவுன் பஞ்., தலைவர் மணி, பர-மத்தி தி.மு.க., நகர செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் காமராஜ், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் விக்னேஸ்வரன், பரமத்தி தெற்கு ஒன்றிய செய-லாளர் லலித்குமார் மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
