/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
/
இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : ஜன 03, 2025 01:39 AM
நாமக்கல், ஜன. 3-
நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணிக்கு சமூக  வலைதள பயிற்சி பட்டறையில் பங்கேற்க மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி அறிவுறுத்தலின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட
ஓட்டுச்சாவடி தி.மு.க., இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக  வலைதள பயிற்சி பாசறை கூட்டம் இன்று காலை, 9:30 மணிக்கு ராசிபுரம்  பூவாயம்மாள் மண்டபத்திலும், மதியம், 2:00 மணிக்கு சேந்தமங்கலம் ஐஸ்வர்யா மஹால் மண்டபத்திலும், நாளை, (4ம் தேதி) நாமக்கல் நளா ேஹாட்டலிலும் நடக்கிறது. மதிமாறன், இளமாறன் ஆகியோர் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
பயிற்சியில் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.