/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
/
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் கட்சியினருக்கு மா.செ., அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 12:50 AM
நாமக்கல், 'இன்று, தி.மு.க., மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது. கட்சியினர் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை, முல்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், தொகுதி பார்வையாளர்கள், நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர் ஜான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி, வரும், 10ல், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதையடுத்து, சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பணி மற்றும் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.