தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க., நிர்வாகி த.வெ.க.,வில் இணைந்தார்

தி.மு.க., நிர்வாகி த.வெ.க.,வில் இணைந்தார்

தி.மு.க., நிர்வாகி த.வெ.க.,வில் இணைந்தார்


ADDED : ஜூன் 19, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் த.வெ.க.,வில் இணைந்தார்.

நாமக்கல், திருச்சி ரோடு பொன் விழா நகரை சேர்ந்தவர் காந்தி (எ) பெரியண்ணன். இவர் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராகவும், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர், தி.மு.க.,வில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்துள்ளார்.

சென்னையில் நடந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியில், த.வெ.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில், காந்தி (எ) பெரியண்ணன் இணைந்தார். அவருக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் சதீஸ், ‍எம்.எல்.ஏ., திலீப் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து, காந்தி (எ) பெரியண்ணன் கூறுகையில். ''முதல்வர் விஜய் இன்றைய இளம் தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளார். தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கி வருகிறார். இதனால், தமிழகத்தின் நலன் கருதி எனது ஆதரவாளர்கள், 2,000 பேரை விரைவில் த.வெ.க.,வில் இணைக்க உள்ளேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us