/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் யூனியனில் தி.மு.க., சாதனை கூட்டம்
/
வெண்ணந்துார் யூனியனில் தி.மு.க., சாதனை கூட்டம்
ADDED : மே 14, 2025 02:04 AM
வெண்ணந்துார் :வெண்ணந்துார்
யூனியன், பொன்பரப்பிபட்டியில், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை
விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமை
வகித்தார். கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும்,
மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., அமைச்சர்
மதிவேந்தன், தலைமை பேச்சாளர்கள், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை
செயலாளர் தருண், பரத் ஆகியோர், தி.மு.க., அரசின் நான்காண்டு கால
சாதனைகளை விளக்கி பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளர்
பாலச்சந்திரன், பேரூர் செயலாளர்கள் வெண்ணந்துார் ராஜேஷ், அத்தனுார்
கண்ணன், விஜயபாஸ்கர், கவுரி, அருண், செல்வராஜ் உட்பட நிர்வாகிகள்
பலர் பங்கேற்றனர். ராசிபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி
ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் நன்றி தெரிவித்தார்.