/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
17ல் கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா: ஏராளமானோர் பங்கேற்க முடிவு
/
17ல் கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா: ஏராளமானோர் பங்கேற்க முடிவு
17ல் கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா: ஏராளமானோர் பங்கேற்க முடிவு
17ல் கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா: ஏராளமானோர் பங்கேற்க முடிவு
ADDED : செப் 13, 2025 01:57 AM
நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, தொகுதி பொறுப்பாளர்கள் நன்னீயூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில், 15,516 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் மூலம், 17,613 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், 520 கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், திருப்பூர், நாமக்கல்லில், 550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி.
வரும், 15ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழகம் முழுவதும், 68,000 ஓட்டுச்சாவடிகளில், ஓரணியில் தமிழகம் இயக்கத்தில் இணைந்த குடும்பங்கள் ஒன்று கூடி மண் - மொழி - மானம் காப்பதற்கான உறுதிமொழியை முன்மொழிய வேண்டும். வரும், 17ல், கரூர் மாவட்டத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.