/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவனை கடிக்க துரத்திய நாயால் பரபரப்பு
/
சிறுவனை கடிக்க துரத்திய நாயால் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 01:36 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி, பழைய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் ரோடு, பட்டணம் ரோடு, நாமக்கல் ரோடு, எல்.ஐ.சி., அலுவலக பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு, நகர வங்கி தெரு வழியாக, நான்கு வயது சிறுவன் தன் தாய், சகோதரியுடன் நடந்து சென்றான். சிறிது துாரம் நடந்து சென்ற சிறுவன், தாயின் கையை விடுவித்துக்கொண்டு சாலையில் தனியாக நடந்து சென்றார்.
இதை நோட்டமிட்ட அங்கு படுத்திருந்த தெருநாய் ஒன்று, சிறுவனை கடிக்க பாய்ந்து சென்றது. இதனால் பயந்த சிறுவன், பதற்றத்துடன் அருகில் உள்ள வீட்டிற்குள் சென்று தப்பித்துக்கொண்டான். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை குலை நடுங்க வைக்கிறது. இந்நிலையில் நகர வங்கி தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.