/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் இறக்கி விடப்படும் நாய்கள் அம்மன் கோவில் பக்தர்கள் பாதிப்பு
/
ஏரியில் இறக்கி விடப்படும் நாய்கள் அம்மன் கோவில் பக்தர்கள் பாதிப்பு
ஏரியில் இறக்கி விடப்படும் நாய்கள் அம்மன் கோவில் பக்தர்கள் பாதிப்பு
ஏரியில் இறக்கி விடப்படும் நாய்கள் அம்மன் கோவில் பக்தர்கள் பாதிப்பு
ADDED : ஆக 13, 2025 07:20 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலுக்கு, அமாவாசை, பவுர்ணமி, சனி, ஞாயிறில் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக கோவில் வளாகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களை கடிக்க பாய்கின்றன. கோவிலில் பலியிடப்படும் ஆடு, கோழி ஆகியவற்றை நாய்கள் கவ்விச்செல்கின்றன. அசைவ உணவை சமைத்து, உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு பரிமாற விடாமல், நாய்கள் தொல்லை கொடுக்கின்றன.
மக்கள் கூறுகையில், 'வெளியிடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, வாகனங்களில் ஏற்றி வந்து, கோவில் அருகே பனமரத்துப்பட்டி ஏரியில் இறக்கி விடுகின்றனர். அவை, உணவு தேடி கோவில் வளாகத்துக்கு வந்து இடையூறு தருகின்றன. வெறி பிடித்த நாய்கள், உடலில் காயங்களுடன் சுற்றும் நாய்களால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.