ADDED : ஜன 13, 2025 02:47 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகி-றது.
இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்-தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர்.இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து பொங்கல் வைத்து படைப்-பதால், அசைவ உணவு வீடுகளில் சமைக்கவில்லை. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்த விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்ப கோழிகளை கொண்டு சென்றனர்.