ADDED : செப் 01, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை, 5:00 மணிக்கு நாட்டுக்கோழி சந்தை கூடுவது வழக்கம்.
அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 100 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கும், கிராஸ் நாட்டுக்கோழி, 300 ரூபாய்க்கு விற்றது, 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.