/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் பயன்பாட்டுக்கு 63 சென்ட் நிலம் தானம்
/
மக்கள் பயன்பாட்டுக்கு 63 சென்ட் நிலம் தானம்
ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
மல்லசமுத்திரம்: இ.புதுப்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 63 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய, 15 பேரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மல்லசமுத்திரம் யூனியன், இ.புதுப்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பூசாரிநாயக்கன்வலவு, தோட்டிக்காடு பகுதியை சேர்ந்த சின்னப்பநாயக்கர், முத்துக்கண்ணு, வெங்கடாசலம், துரைசாமி, குப்புசாமி, முத்துசாமி, மணி, குமாரசாமி, தேமக்காள், காமநாயக்கர், தனபால், ராஜா, நல்லதம்பி, சாலம், கனகராஜ் உள்ளிட்ட, 15 பேர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 63 சென்ட் பூர்வீக சொத்தை முழு மனதுடனும், மக்கள் பயன்பாட்டுக்காக பஞ்., நிர்வாகத்திடம் தானமாக வழங்கினர்.
பஞ்., தலைவர் மாயகிருஷ்ணன், செயலாளர் குப்புசாமி, பி.டி.ஓ., சுந்தரம் முன்னிலையில் நேற்று, மல்லசமுத்திரம் பஞ்., அலுவலகத்தில் தான செட்டில்மென்ட் பத்திரத்தை வழங்கினர். இவர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.