/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரைவு வாக்காளர் பட்டியல்; மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,93,706 பேர் நீக்கம்
/
வரைவு வாக்காளர் பட்டியல்; மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,93,706 பேர் நீக்கம்
வரைவு வாக்காளர் பட்டியல்; மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,93,706 பேர் நீக்கம்
வரைவு வாக்காளர் பட்டியல்; மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,93,706 பேர் நீக்கம்
ADDED : டிச 20, 2025 06:52 AM

நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு-மான துர்கா மூர்த்தி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளி-யிட்டார். அதில், 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம், 1,93,706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்ட-சபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்-படி, மாவட்டம் முழுவதும், கடந்த, 7ல் துவங்கி வாக்காளர் பட்-டியல் தீவிர திருத்த முகாம் நடந்தது. ஓட்டுச்சாவடி நிலை அலுவ-லர்கள், வீடுவீடாக சென்று, எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்-டருமான துர்கா மூர்த்தி, மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, நேற்று வெளி-யிட்டார்.
இதுகுறித்து, கலெக்டர் துர்கா மூர்த்தி கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியலில், ஆண்கள், 7,08,585, பெண்கள், 7,57,812, இதரர், 263 என மொத்தம், 14,66,660 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். எஸ்.ஐ.ஆர்., திருத்தம் மேற்கொள்ளப்-பட்ட பின், ஆண்கள், பெண்கள், இதரர் என, மொத்தம், 12,72,954 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர்., திருத்தத்தின்போது, இறந்த வாக்காளர்கள், 66,312, குடிபெயர்ந்த-வர்கள், 1,00,201, இருமுறை பதிவு செய்தவர்கள், 8,636, கண்ட-றிய முடியாதவர்கள், 18,023, மற்றவை, 534 என மொத்தம், 1,93,706 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்-பட்டுள்ளது.
இது ஏற்கனவே இருந்த மொத்த வாக்காளர்களில், 13.21 சத-வீதம். அதில், அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில், 20.07 சதவீதம், குறைந்தபட்சமாக, ராசிபுரம் தொகுதியில், 8.91 சதவீதம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்-ளனர். வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்-களது விபரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இதில் மாற்றம் தேவை என்றால், தங்களது கோரிக்கைகளை, உரிய படிவங்களில் பூர்த்தி செய்து, நேற்று முதல் வரும், ஜன., 18 வரை சம்பந்தப்-பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.
வரும், 2026 ஜன., 1ஐ, தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்-தியடைந்த இளம் வாக்காளர்களும், இதுவரை வாக்காளர் பட்டி-யலில் பெயர் சேர்க்காதவர்களும், படிவம், 6-ல் உறுதிமொழி படிவம் இணைத்து, தேவையான ஆவணங்களுடன் ஓட்டுச்சா-வடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

