sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிரைவர் கொலை வழக்கு; 10வது குற்றவாளி கைது

/

டிரைவர் கொலை வழக்கு; 10வது குற்றவாளி கைது

டிரைவர் கொலை வழக்கு; 10வது குற்றவாளி கைது

டிரைவர் கொலை வழக்கு; 10வது குற்றவாளி கைது


ADDED : செப் 25, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: பாலமேட்டில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழ க்கில், 10வது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மல்லசமுத்திரம் அருகே, பாலமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்; இவரது மகனும், மருமகனும் சொத்திற்காக கூலிப்படையை வைத்து, கடந்த ஜூன், 3ல் செல்வத்தை கொலை செய்தனர். பின், எலச்சிபாளையம் அருகே, திம்மராவுத்தம்பட்டி ஏரியில் சடலத்தை புதைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய, 9 குற்றவாளிகளை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். 10வது குற்றவாளியான செல்வத்தின் சம்பந்தியான வடிவேல் தலைமறைவாக இருந்தார். இவரை, முக்கிய குற்றவாளியாக போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வடிவேல், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, திருச்செங்கோட்டில் உள்ள அவரது மகள் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த வடிவேலை கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us