/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவன் மீது மோதிய கார் டிரைவர் தலைமறைவு
/
சிறுவன் மீது மோதிய கார் டிரைவர் தலைமறைவு
ADDED : ஆக 28, 2025 01:50 AM
குமாரபாளையம், சேலம் மாவட்டம், திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராகுல்,14. சங்ககிரி, சங்கர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை 6:00 மணியளவில் குமாரபாளையம் அருகே தனியார் பள்ளி விளையாட்டு திடலில், விளையாட சென்றார்.
விளையாடி விட்டு திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வட்டமலை சாலையில் இவர் வந்த போது, எதிரில் வந்த ஸ்விப்ட் கார், இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
பலத்த காயமடைந்த ராகுல், பவானி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து, ராகுல் தந்தை சுரேஷ்குமார், 40, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்தனர். தலைமறைவான காரையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.