/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ., ஆய்வு
/
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ., ஆய்வு
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ., ஆய்வு
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : நவ 19, 2025 03:46 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை பகுதியில், சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் வீடு வீடாக வழங்கினார்.
அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண் மற்றும் போட்டோ மற்றும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என, பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ் தோகைமலை பகுதியில் வீடு வீடாக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு மேற்
கொண்டார். அப்போது கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம், முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்தார். தோகைமலை பகுதியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள், தோகைமலை யூனியன் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருவதையும், பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கினார்.ஆய்வின்போது குளித்தலை தாசில்தார் இந்துமதி, தோகைமலை ஆர்.ஐ., அரவிந்தன், வி.ஏ.ஓ., மணி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.