/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீஸ்காரரை தாக்கிய போதை வாலிபர் கைது
/
போலீஸ்காரரை தாக்கிய போதை வாலிபர் கைது
ADDED : அக் 07, 2025 01:27 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு வாலரைகேட் ரவுண்டானாவில், நேற்று முன்தினம் மாலை, போக்குவரத்து போலீஸ்காரர் கந்தசாமி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கொக்கராயன்பேட்டை சாலையில் இருந்து டூவீலரில் அதிவேகமாக வந்த வாலிபர் ஒருவர், சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.
இதைக்கண்ட கந்தசாமி, அந்த வாலிபரை துாக்கிவிட முயன்றார். அந்த வாலிபர் மது போதையில் இருந்ததால், போக்குவரத்து போலீஸ்காரர் கந்தசாமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். தொடர்ந்து அவரை தாக்கினார்.
அங்கு சுற்றியிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து தடுத்து, திருச்செங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், விட்டம்பாளையம், பிலிக்கல்மேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 24, என்பதும், பந்தல் அமைக்கும் பணி செய்து வந்ததும்
தெரியவந்தது.
போக்குவரத்து போலீஸ்காரர் கந்தசாமி அளித்த புகார்படி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹரிஹரனை சிறையில் அடைத்தனர்.