/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது
/
அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது
ADDED : ஜன 02, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, அரசு டவுன் பஸ்சை நிறுத்தி விட்டு, உணவு இடைவேளைக்காக ஓட்டுனர் பச்சமுத்து சென்றார்.
சாப்பிட்டு திரும்பி வந்த போது, பஸ்சை காணவில்லை. உடனே அவர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
காணாமல் போன பஸ்சை, இரவு முழுவதும் போலீசார் தேடினர். அந்த பஸ் சங்ககிரி அருகே நின்றது. அந்த பஸ்சை, குடிபோதையில், 15 கி.மீ., ஓட்டி வந்த ஊத்தங்கரையைச் சேர்ந்த சண்முகம், 21, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

