/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 27, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில், போதைப் பொருள் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பள்ளி அருகே உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக தகவல் அளிக்குமாறு மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.