/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிகளில் 'போதை' தடுப்பு விழிப்புணர்வு
/
பள்ளிகளில் 'போதை' தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 28, 2025 04:28 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை, பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்-டவை விற்பனை செய்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும், கட்டுரை போட்டி, நாடகம், திருக்-குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாண-வியருக்கு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி தனியார் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.