/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
22ல் டி.எஸ்.பி., அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
/
22ல் டி.எஸ்.பி., அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
ADDED : டிச 18, 2025 05:52 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, மொளசி பகு-தியில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. விரைவில் கொக்கராயன்பேட்டை பகுதியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்படுகிறது. இந்த, ஐந்து போலீஸ் ஸ்டேஷனை உள்ள-டக்கி, பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை, காந்திபுரம் இரண்-டாவது வீதியில், புதிய டி.எஸ்.பி., அலுவலகம் உருவாக்கப்பட்-டுள்ளது.
இந்த அலுவலகத்தின் முதல் டி.எஸ்.பி.,யாக கவுதம் என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய டி.எஸ்.பி., கவுதம், கடந்த மாதம் நவ., 24ல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். புதிய டி.எஸ்.பி., பொறுப்பு ஏற்றபோது மட்டுமே, அலுவலகம் காலையில் திறக்கப்பட்டு, மதியம் மூடப்பட்டது. ஆனால், அரசு ஆணைப்படி இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொக்கராயன்-பேட்டை புதிய போலீஸ் ஸ்டேஷனும் திறப்பு விழாவிற்கு தய-ராகி உள்ளது.இந்நிலையில், பள்ளிப்பாளையம் உட்கோட்டம் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் கொக்கராயன்பேட்டை புதிய போலீஸ் ஸ்டேஷன் வரும், 22ல் முதல்வர் கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார் என, பள்ளிப்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.

