/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு
/
காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு
ADDED : ஆக 30, 2025 12:56 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து விதிமுறை மீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை, பள்ளிப்பாளையம் ஒன்பதாம்படி பகுதியில் செல்லும் பிரதான வடிகாலில் சாயக்கழிவுநீர் சென்றது. தற்போது, ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டமெத்தை அடுத்த அரசங்காடு, ஆண்டிக்காடு பகுதியில் பெரியளவில் சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகள் மீது சில மாதங்களுக்கு முன் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், தற்போது செயல்பட்டு வருகிறது. பகல் முழுவதும் சாய ஆலைகள் இயக்கப்பட்டு, சாயக்கழிவுநீர் தேக்கி வைத்து, இரவில் வெளியேற்றி வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து தான் சாயக்கழிவுநீர் நேற்று, இந்த ஒன்பதாம்படி பகுதி வடிகாலில் வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.