/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ-கே.ஒய்.சி., பதிவு செய்ய முகாம்
/
இ-கே.ஒய்.சி., பதிவு செய்ய முகாம்
ADDED : பிப் 17, 2024 12:56 PM
நாமகிரிப்பேட்டை: 'பி.எம்., கிசான் நிதி பெற விவசாயிகள், இ-கே.ஒய்.சி., செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது' என, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பி.எம்., கிசான் நிதி, 2,000 ரூபாய் கிடைக்காத விவசாயிகள், இ-கே.ஒய்.சி., பதிவு செய்ய வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் வேளாண் விரிவாக்க மையத்தில், வரும், 21 வரை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் இங்கு விவசாயிகள் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் வரும்போது தங்களுடைய ஆதார் அட்டை நகல், பட்டா நகல், மொபைல் போன் மற்றும் வங்கி புத்தக நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் விவசாயிகளும், மேற்கண்ட ஆவணங்களுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.