/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 16, 2024 10:52 AM
நாமக்கல்: நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
இதில் எம்.பி.,யும்., கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான ராஜேஸ்குமார் பேசியதாவது: லோக்சபா தேர்தல் தேதிக்கு முன், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் கேட்டறிந்து, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதிக நிதி ஒதுக்கீடு பணி என்றால், எம்.எல்.ஏ.,வை கொண்டு அடிக்கல் நாட்டும் விழாக்களை நடத்தலாம். இல்லையெனில் அந்தந்த ஒன்றிய செயலர்களே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பணிகளை தொடங்கலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு செய்த சாதனைகள், வழங்கிய திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பணியாற்ற வேண்டும்.
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணி நடைபெற உள்ளது. ராசிபுரம் அரசு மருத்துவமனையை. மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு பேசினார்.
அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.