/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுவில் எம்.எல்.ஏ.,வுக்கு இரங்கல் தீர்மானம்

ADDED : அக் 26, 2025 12:24 AM
நாமக்கல், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து பேசினார்.
அப்போது, மறைந்த பொன்னுசாமி எம்.எல்.ஏ., செய்த சாதனைகள், அவரது குண
நலன்களை நினைவு கூர்ந்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பொன்னுசாமி எம்.எல்.ஏ., படத்திற்கு, தி.மு.க., நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மேலும், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், எம்.எல்.ஏ., பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அவை தலைவர் மணிமாறன், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, டவுன் பஞ்., செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.