/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியார் நிறுவன தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: டிச., 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
தனியார் நிறுவன தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: டிச., 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தனியார் நிறுவன தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: டிச., 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தனியார் நிறுவன தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: டிச., 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 28, 2024 06:49 AM
நாமக்கல்: 'தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்-தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற, வரும், 31க்குள் விண்-ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயலட்சுமி (அமலாக்கம்) தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தொழி-லாளர் நல நிதி சட்டத்தின் கீழ்,
தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள், வணிக
நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும்,
தொழிலாளர்-களுக்கு, ஆண்டுதோறும், தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக, 60 ரூபாய் வீதம்
கணக்கிட்டு, நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்,
தொழி-லாளர் நல நிதி தொகையினை வேலை அளிப்போர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த
வேண்டும்.அதன்படி, நடப்பு, 2024ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை, வரும் டிச., 31க்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தப்படும் தொழிலாளர் நல நிதி மூலம், தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு
வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரீகேஜி முதல் பட்ட
மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைக-ளுக்கு, 1,000- முதல், 12,000 ரூபாய்- வரை கல்வி
உதவித்தொகை, புத்தகங்கள் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்-தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்-கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு, தொழிலாளர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த உதவித்தொ-கையை பெற தொழிலாளரின் மாத சம்பளம்,
35,000 ரூபாய்-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய
அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்-ணப்பங்கள், 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை--6' என்ற
முகவரிக்கு, டிச., 31க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.