/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
/
தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : ஜூன் 30, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற தேவாங்கர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகங்கள், தேவாங்கர் சமுதாய நெசவு தொழில் சார்ந்த ஆண், பெண்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது.
தலைமை மன்ற ஆலோசகர் மாணிக்கம் தலைமை வகித்தார். சங்க செயலர் நடராஜ பெருமாள் வரவேற்றார். ஜே.கே.கே., நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணா, தொழிலதிபர் குணசேகரன் உள்ளிட்டோர், கல்வி உதவித்தொகை, நெசவாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்.